உலகம்
Typography

உலகில் மிகப் பாரியளவில் வாழ்வியல் பிரச்சினைகளை சந்தித்து வரும் உள்நாட்டு பூர்வீகக் குடிகளுக்கு முன்னேற்றகரமான கல்வியைக் கற்க வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என சர்வதேசத்துக்கு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட்டு 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சர்வதேச பூர்வீகக் குடிகள் தினத்தை உலகம் அனுசரித்துள்ள நிலையில் தான் ஐ.நா இந்த அழைப்பை விடுத்துள்ளது. 

ஐ.நா இன் கணிப்புப் படி நிகழ்காலத்தில் 370 மில்லியன் வெவ்வேறு பட்ட பூர்வீகக் குடிகள் உலகம் முழுதும் உள்நாடுகளுக்குள் பரந்து வாழ்வதாகவும் இவர்களுக்கு அத்தியாவசியக் கல்வி உடனே தேவைப் படுவதாகவும் தெரிவிக்கப்  பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் விடுத்த அறிக்கையில், 'இன்றைய உலகில் அரச பள்ளிகளில் கற்கும் பூர்வீக மாணவர்களுக்கும் சாதாரண மாணவர்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுவதால் பூர்வீக மாணவர்கள் புறக்கணிக்க படுகின்றனர். இதனால் இரு தரப்பும் சமமாகப் பார்க்கப் படுதல் அவசியம் என்றும் வலியுறுத்துகிறேன். மேலும்  பூர்விகக் குடிகள் தமது கலாச்சாரம் அழியாதவாறு முன்வைக்கும் தனிப்பட்ட அனுபவங்களுக்கும் முன்னுரிமை வழங்கப் பட வேண்டும்!' என்று தெரிவித்துள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS