உலகம்
Typography

சிரியாவின் அலெப்போ போரை  நிறுத்துவதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மேற்கொண்ட யுத்த நிறுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதுடன் அலெப்போ நகர் மீது அரச படைகள் பாரிய முற்றுகைப் போரை மேற்கொண்டுள்ளன.

ஏற்கனவே அலெப்போவின் பெரும் பகுதி கிளர்ச்சிப் படையினர் வசம் இருப்பதுடன் அங்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு, மருந்து மற்றும் மின்சாரம் என்பனவும் தீர்ந்து வருகின்றது.  இதற்கு முக்கிய காரணமாக குண்டு வீச்சில் மருத்துவ மனைகள், சிகிச்சை மையங்கள், மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு என்பவை பாதிக்க பட்டிருப்பதைக் கூற முடியும். இதனால் அலெப்போவிலுள்ள 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவல நிலையை சந்தித்துள்ளனர். 

ஏற்கனவே இந்த அலெப்போ முற்றுகை காரணமாக நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ள நிலையில் அலெப்போவில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டு வரும் பயணிகள் நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வந்துள்ளதாகவும் ஓர் மருத்துவர் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறைந்தது 48 மணிநேர யுத்த நிறுத்தம் தரப்பட்டால் தான் பாதிக்கப் பட்ட அலெப்போவில் பல ஆயிரக் கணக்கான குழந்தைகள் உட்பட 20 இலட்சம்  மக்களுக்கும் உணவு, குடிநீர், மருந்துகள் என்ற அத்தியவாசியப் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என ஐ.நா சண்டையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பையும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிரியாவுக்கு தற்போது உடனே தேவைப்படும் யுத்த நிறுத்தம், மனிதாபிமான உதவி மற்றும் அரசியல் தீர்வு ஆகிய நோக்கங்களை முன் வைத்து அங்கு செயற்படுவதற்காக ரஷ்யாவும் துருக்கியும் இணைந்து ஒரு பொறிமுறையை ஏற்படுத்தவுள்ளன. இதில் புலனாய்வு சேவைகள், வெளியுறவு அமைச்சுக்கள், ஆயுதம் தாங்கிய படைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இணைக்கப் படுவார்கள் என துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் செவுசொக்லு புதன்கிழமை தெரிவித்துள்ளதும் நோக்கத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்