உலகம்
Typography

அண்மையில் ஃபேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஃபேஸ்புக் ஸ்தாபகக் மார்க் ஸூக்கர்பர்க் நேரடியாக சில பிழைகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளார். இந்நிலையில் உலகின் விண் ஓடங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களும் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளன.

அதாவது இந்த நிறுவனங்களின் CEO ஆன எலொன் மஸ்க் தமது ஃபேஸ்புக் பக்கங்களை டெலிட் செய்துள்ளார். ஏற்கனவே வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இணை இயக்குனர் ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது என்று டூவிட் செய்துள்ள நிலையில் தற்போது எலொன் மஸ்க் இனது நடவடிக்கையினாலும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் எலொன் மஸ்க் இற்கு விடுக்கப் பட்ட சவாலை ஏற்றே அவர் இவ்வாறு தனது அதிகாரப் பூர்வ கணக்குகளை மூடியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை ஃபேஸ்புக்குடன் இணைந்து பல நாடுகளின் தேர்தல் விவகாரங்களில் மூக்கை நுழைத்த கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறூவனத்துக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் குறித்த முக்கிய 6 கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு இந்திய மத்திய அரசு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கான விபரங்களைத் தர மறுக்கும் பட்சாத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. குறித்த 6 கேள்விகளும் வருமாறு :

1. இந்தியர்களின் ஃபேஸ்புக் தகவலை சேகரித்து பயன்படுத்தினீர்களா?
2. அப்படியெனில் எந்த நிறுவனத்துக்கு தகவல்கள் பயன்படுத்தப்பட்டது?
3. அந்த நிறுவனங்கள் எவ்வாறு தகவல்களை பெற்றன?
4. இதற்காக ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டதா?
5. ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் எத்தகைய வகையில் பயன்படுத்தப்பட்டது?
6.பெறப்பட்ட தகவல் மூலம் தொகுப்பு ஏதும் தயார்செய்யப்பட்டதா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்