உலகம்
Typography

அண்மையில் அமெரிக்கத் தேர்தல் உட்பட சில முக்கிய விடயங்களிள் ஃபேஸ்புக் வாயிலாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் அத்துமீறி சுமார் 50 மில்லியன் பயனாளர்களது தகல்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்போது பயனாளிகளிடம் கேளாது குறித்த நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் தகவல்களை அளித்தது தகவல் உரிமையை மீறிய செயல் என்று கண்டனமும் எழுந்தது.

இதையடுத்து ஃபேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பர்க் CNN ஊடகம் வாயிலாக நேரடியாக நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரினார். இதற்குப் பின் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் 2018 தொடக்கம் 2019 இறுதி வரை உலகளாவிய ரீதியில் தேர்தலுக்கு மிக முக்கிய காலம் என்றும் இக்காலப் பகுதியில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பிரேசில், மெக்சிக்கோ, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடைபெறும் தேர்தலிம் முன்னைய தவறு நடக்காது என்றும் தேர்தல் முடிவுகளின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் எந்தவொரு தகவல் திருட்டும் ஃபேஸ்புக்கில் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக உலகம் முழுதும் இருக்கும் தேர்தல் பரப்புரை அமைப்புக்களின் கணக்கை ஃபேஸ்புக்கில் முடக்க உள்ளதாகவும் தெரிய வருகின்றது. செயற்கை அறிவுத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இவற்றை இனம் காணும் பணியும் முன்னெடுக்கப் படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள ஃபேஸ்புக் இதுவரை 15 000 பேரை மேலதிகமாக பணியில் அமர்த்தியுள்ளது. இந்த மாத இறுதியில் இன்னும் 5000 பேர் பணியில் அமர்த்தப் படவுள்ளனர். இவ்வாறு பணியில் அமர்த்தப் படுபவர்களது முக்கிய செயலாக உலகம் முழுதும் உள்ள பொய்யான கணக்குகளை முடக்குதல், தேர்தல் குறித்து தவறான கருத்தைத் தரும் ஐடிக்களை முடக்குதல் மற்றும் தேர்தல் சமயத்தில் அதற்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் அமைதியைக் குழைப்பவர்களின் ஐடிக்களை முடக்குதல் போன்றவை அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்