உலகம்
Typography

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் சிவன் என்பவர் கிராம மக்கள் பயன்பாட்டுக்காகவும் துரித இணைய வசதிக்காகவும் என சுமார் 29 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தவிர இந்த வருட இறுதியில் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பவுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

குறித்த சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சந்திரத் தரையில் இறங்கவுள்ள ரோபே மூலம் அதன் நிலப் பரப்பு ஆராயப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை சுமார் 82 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் தனது முதலாவது தகவல் சேமிப்பு மையத்தை இஸ்ரோ கடற்படையுடன் இணைந்து அமைக்கவுள்ளது. நெல்லையில் பொறியியல் கல்லூரி அருகில் இந்திய கடற்படையின் கீழ் செயற்படும் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் மையத்தின் அலுவலகம் உள்ள வளாகத்தில் இந்த இந்திய செயற்கைக் கோள் தகவல் சேகரிப்பு மையம் கட்டப் படவுள்ளது.

இதற்கான கட்டுமானம் ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்கியுள்ளதுடன் இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இவ்விழாவில் சிவன் அவர்கள் பேசிய போது காலநிலை மாற்றம் குறித்து அறிந்து கொள்ள அண்மையில் அனுப்பி வைக்கப் பட்டு தகவல் தொடர்பை இழந்த ஜீ சாட் 6 ஏ என்ற செயற்கைக் கோளின் இருப்பிடம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்