ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை உலக யானைகள் தினமாகும். உலகில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப் படும் அபாயத்தில் உள்ள யானைகளது முக்கியத்துவம் மனித இனத்துக்கும் அவசியமான ஒன்றே ஆகும். ஏன் இந்த யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை இந்தியாவின் மதுராவில் உள்ள யானைகள் காப்பகமான Wildlife SOS தெரிவித்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்.
1.யானைகள் பெரும்பாலானவை பெண்ணிய குணங்களைக் கொண்டவை. மிகவும் பாசமாகப் பழகக் கூடியவை என்பதுடன் மிகுந்த நினைவாற்றல் உடையவையும் ஆகும்.
2.யானைகள் சமூகத்துக்கு மிகச் சிறந்த நண்பர்கள் ஆகும். அவை ஒன்றாகக் கூடி வாழ்வதில் மிகவும் ஆர்வம் உடையவை ஆகும்.
3.யானைகள் சமூகத்துக்கு மிகச் சிறந்த வளம் ஆகும். அவை மிக எளிதில் தத்தெடுக்கப் படக்கூடியவை. மனிதனுக்குத் தேவையான உதவிகளை செய்யக் கூடியவை. முக்கியமாக மரங்களை சாய்த்தல், மிகவும் பாரமான பொதிகளை கொண்டு செல்லுதல் என்பவற்றைக் கூறலாம்.
4.யானைகள் குழுவாக ஒன்று சேர்ந்து இயங்குவதில் தனித் திறமை கொண்ட உயிரினம் ஆகும்.
5.யானைகள் ஒரு விடயத்தை மிக விரைவாகக் கற்றுக் கொள்ளக் கூடிய உயிரினம் ஆகும்.
6.யானைகள் மிகச் சிறந்த பண்புகளை உடைய பெற்றோர்களாகத் தமது குட்டிகளுக்கு வழிகாட்டக் கூடியவை ஆகும்.
7.யானைகள் தமக்கிடையேயும், மனிதருடனும் மிகத் திறமையாகத் தகவல் பரிமாற்றம் செய்யக் கூடியவை.
8.யானைகள் சுற்றுச் சூழல் தொடர்பில் மிகுந்த அக்கறை உடையவை ஆகும்.
9.எப்படி மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குவது என்பது குறித்து அதிகம் தெரிந்த உயிரினம் யானை ஆகும்.
10.யானைகள் எதையும் இலகுவாக மறக்காது. ஆனால் மன்னிக்கத் தெரிந்த உயிரினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.