உலகம்
Typography

அமெரிக்காவின் பிரபல இதழான ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் அரசியல், வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அவர்களின் திறமை மற்றும் ஆளுமை அடிப்படையில் தரவரிசை செய்து பட்டியல் வெளியிடுவது வழக்கம்.

அவ்வகையில் சுமார் 75 பேர் அடங்கிய 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரண்டாவது இடத்தில் கடந்த 4 வருடங்களாக முதலிடத்தில் இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிடித்துள்ளனர். 3 ஆவது இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். 2016 இல் கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மோடி எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு இப்பட்டியலில் 9 ஆம் இடத்தைக் கொடுத்துள்ளது ஃபோர்ப்ஸ். இப்பட்டியலில் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் 19 ஆவது இடத்தையும், இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த 75 பேர் அடங்கிய பட்டியலில் மோடியைத் தவிர்த்து இன்னுமொரு இந்தியரான முகேஸ் அம்பானியும் இடம்பெற்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்