உலகம்
Typography

சமீபத்தில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணைவியார் மெலானியா டிரம்ப் மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் என்ற இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

தற்போது சிகிச்சை முடிந்த நிலையில் அவர் திடகாத்திரமாக உள்ளதாக செவ்வாய்க் கிழமை டிரம்ப் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் வைத்திய சாலையிலேயே தங்கி ஒரு வாரம் ஓய்வு எடுப்பது அவசியம் என வைத்தியர்கள் அறிவுறுத்தியதால் அவர் ஒரு வாரம் கழித்துத் தான் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. தற்போது வைத்திய சாலையில் ஓய்வு எடுத்து வரும் மெலானியாவை செவ்வாய்க் கிழமை டிரம்ப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தனது துணைவியார் பூரண குணமடைந்து வருவதற்காக அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களை டிரம்ப் பாராட்டியுள்ளார்.

திங்கட்கிழமை மெலானியாவுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப் பட்ட பின் மாலை சற்று நேரம் தனது துணைவியாருடன் டிரம்ப் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மெலானியாவுக்கு சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப் பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள போதும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்த தகவலை அது அவரது அந்தரங்க விடயம் என்பதால் அறிவிக்கவில்லை. ஆனாலும் மெலானியாவுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்டு இருந்த பிரச்சினை ஒரு புற்று நோய் வகை அல்ல என அவருக்கு சிகிச்சை அளித்த தனிப்பட்ட மருத்துவர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்