உலகம்
Typography

உலகில் மிக அதிக வயதில் அதாவது தனது 92 ஆவது வயதில் மலேசியப் பிரதமராகத் தேர்வான மஹாதீர் முகமது தான் குறைந்த பட்சம் ஓரிரண்டு காலமே பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.

சென்ற வாரம் நடைபெற்ற மலேசியப் பாராளுமன்றத் தேர்தலில் எவரும் எதிர்பாராத விதத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அஹோம வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து பிரதமராகத் தேர்வான 92 வயதாகும் மஹாதிர் முகமது அண்மையில் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பிரபல பத்திரிகை டோக்கியோவில் நடத்திய கருத்தரங்கில் பேசிய போது தான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மாத்திரமே மலேசியப் பிரதமராகக் கடமையாற்றுவேன் என்றும் பின்னர் பதவியில் இருந்து விலகினாலும் அரசுக்குப் பின்புலமாக இருந்து ஆலோசனைகள் வழங்கி வருவேன் எனவும் கூறியுள்ளார். விரைவில் சிறை வாசம் முடிந்து வெளிவரவுள்ள அன்வர் இப்ராஹிம் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் தலைவராகப் பணியாற்றுவார் என்றும் மஹாதீர் தெரிவித்துள்ளார்.

அன்வர் இப்ராஹிமின் துணைவியாரான வான் அஷிஷாஹ் வான் இஸ்மாயில் என்பவரே தற்போது மலேசியாவின் துணைப் பிரதமராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்