உலகம்
Typography

1999 இந்தியாவுடனான கார்கில் போரில் பாகிஸ்தான் வலுவான நிலையில் இருந்த போதும் பின்வாங்க முனைந்தமைக்கு நவாஸ் ஷெரீஃப் தான் காரணம் என்றும் இதன் மூலம் அவர் தவறிழைத்து விட்டார் என பாகிஸ்தானின் முன்னால் சர்வாதிகாரியும் இராணுவத் தலைவருமான பெர்வேஷ் முஷாரஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

1999 இல் கார்கில் போர் நடந்த போது அப்போது பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக பணியாற்றிய முஷாரஃப் 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலின் பின்புலத்தில் செயற்பட்டு துரோகம் இழைத்துள்ளார் என நவாஸ் ஷெரீஃப் குற்றம் சாடியிருந்தார். பாகிஸ்தானில் பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள 74 வயதாகும் பதவி விலகிய இரானுவத் தளபதியான பெர்வேஷ் முஷாரஃப் கடந்த வருடம் முதல் மருத்துவ சிகிச்சைக்காக டுபாய் நாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையின் தான் மும்பைத் தாக்குதல் தொடர்பில் தன் மீது சுமத்தப் பட்ட பழிக்குப் பதிலாக கார்கில் போரில் நவாஸ் ஷெரீஃபின் முடிவு தவறானது என முஷாரஃப் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது கார்கில் போரில் பின்வாங்குவது என நவாஸ் ஷெரீஃப் எடுத்த முடிவுக்கு பாகிஸ்தான் செனட்டர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் கூட இணக்கம் தெரிவிக்காத நிலையில் இந்திய அரசின் கடும் அழுத்தத்தாலும் அமெரிக்காவின் அழுத்தத்தாலும் தான் தனது முடிவை நிறைவேற்றி இராணுவத்தைத் திரும்பப் பெற்றிருந்தார் என முஷாரஃப் கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் போரில் தோல்விக்கான முழுப் பழியையும் தன் மீது நவாஸ் ஷெரீஃப் சுமத்தி விட்டது தான் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் முஷாரஃப் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்