உலகம்

பிரிட்டனில் உள்ள விண்ட்சர் கோட்டையில் சார்ல்ஸ் டயானா தம்பதியினரின் 2 ஆவது மகனும் இளவரசருமான ஹரிக்கும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் மார்கில் ஆகிய இருவருக்கும் வெகு விமரிசையாக இன்று சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றுள்ளது.

மேலும் சனிக்கிழமை மாலை புனித ஜோர்ஜ் மண்டபத்தில் இவர்களது திருமண வரவேற்பு வைபவம் நடைபெறவுள்ளது.

இப்புது மணத் தம்பதியருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் தெரேசா மே மற்றும் பிரிட்டனுக்கான அமெரிக்கத் தூதர் உட்பட பல உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளனர். உடல் ந லம் சரியில்லாத காரணத்தால் இந்தத் திருமண நிகழ்வில் மேகனின் தந்தையான தோமஸ் மார்கில் பங்கு பெறவில்லை. மேலும் இத்திருமணம் அரசு சார்பான விழா அல்லாததால் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே உட்பட முக்கிய அரசியல் வாதிகளுக்கு அழைப்பு விடுவிக்கப் படவில்லை.

திட்டமிட்டதை விட 6 நிமிடங்கள் திருமண நிகழ்வுகள் தாமதமாகத் தொடங்கிய செரீனா வில்லியம்ஸ், டேவிட் பெக்கம் மற்றும் ஜோனி வில்கின்ஸன் உட்பட பிரிட்டனின் ஏனைய பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டனர். திருமண வைபவத்தின் போது உறுதி மொழி ஏற்றுக் கொண்ட இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். முக்கிய திருமண நிகழ்வுகள் டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது.

இளவரசர் ஹரியைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரிட்டன் அரச குடும்பத்தில் முதல் கருப்பின கலப்பினப் பெண் இளவரசியாக மேகன் பெருமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.