உலகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா பி உயர் நிலைப் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ட்மிட்ரியோஸ் பகோர்டிஸ் என்ற 17 வயது மாணவன் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவனுடன் படித்த சக மாணவர்கள் 1 ஆசிரியர் உட்பட சக மாணவர்கள் 9 பேர் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளான். அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பள்ளிகளில் இடம்பெறும் 3 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பு ஃபுளோரிடாவின் பார்க்லேண்டில் இடம்பெற்ற இது போன்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பருவ வயது மாணவர்கள் பலியாகி இருந்தனர். இதையடுத்து மிகவும் சூடாக அமெரிக்க செனட்டில் இது போன்ற சம்பவங்களைத் தடுப்பது தொடர்பிலான கடுமையான சட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்ததாக இடம்பெற்ற டெக்ஸாஸ் சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்ததாகவும் ஆனால் அதற்கு முன்பு போலிசாரால் கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.