உலகம்

கியூபாவில் சனிக்கிழமை பகல் தலைநகர் ஹவானாவின் ஜோஸ் மார்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அருகே கிழக்கு திசையில் உள்ள ஹொல்குயின் என்ற நகரை நோக்கிப் புறப்பட டேக் ஆஃப் ஆகி சிறிது நேரத்தின் பின்னர் போயிங் 737 ரக பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் குறித்த விமானத்தில் பயணித்த நூற்றுக்கும் அதிகமான பயணிகள் பலியாகி உள்ளதாக அஞ்சப் படுகின்றது. ஆனால் 110 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம் சிக்கிய விபத்தில் கடுமையான காயங்களுடன் தப்பித்த 3 பேர் மாத்திரமே சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 3 தசாப்தங்களில் கியூபாவின் மிக மோசமான விமான விபத்தாகக் கருதப் படும் இந்த விபத்தில் சிக்கிய போயிங் 737 ரக விமானம் 39 வருடங்கள் சேவையில் ஈடுபட்ட விமானம் ஆகும்.

விமானம் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் தீயணைப்புப் படையினர் விரைந்த போதும் 3 பேரை மாத்திரமே உயிருடன் மீட்க முடிந்துள்ளது. சேதமடைந்த சடலங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப் பட்டு வருகின்றது. விமானம் விபத்தில் சிக்கிய திருத்தமான காரணத்தை விசேட கமிசன் மூலம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக கியூபா அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் 104 பயணிகளும் 6 குழு உறுப்பினர்களும் பயணம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.