உலகம்

2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதன் பின் முதன் முறையாக ISIS போராளிகளின் பிடியில் இருந்து முற்றிலும் தலைநகர் டமஸ்கஸ் அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக ரஷ்ய விமானப் படையின் துணையுடன் சிரிய அரசு தீவிர தாக்குதலைத் தொடுத்து வந்தது.

இதன் பயனாகவே தற்போது டமஸ்கஸ் முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இது தொடர்பில் சிரியாவில் இயங்கி வரும் யுத்தக் கண்காணிப்புக் குழு ஒன்று அளித்த தகவலில் டமஸ்கஸ்ஸின் தெற்கே ISIS வசம் இருந்த பகுதிகளில் தற்போது அரச படைகள் நுழைந்ததை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட 24 மணித்தியாலத்துக்கு யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப் பட்டு போராளிகள் வெளியேற சந்தர்ப்பம் அளித்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் பல ISIS போராளிகள் சரணடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அளித்த தகவலில் டமஸ்கஸ்ஸில் இயங்கி வரும் பாலஸ்தீனர்களின் யார்மௌக் அகதி முகாம் மற்றும் அருகே உள்ள அல் தடமொன் பகுதிகளில் இருந்து கடந்த ஒரு இரவுக்குள் ISIS தீவிரவாதிகளை ஏந்திய பஸ் வண்டிகள் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து டமஸ்கஸ்ஸில் பொது மக்கள் மத்தியில் பதற்றம் தணிந்துள்ளது. போராளிகளுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள அரசு மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை மே 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள ஸ்பின்கர் என்ற மைதானத்தில் ரம்ஜான் கோப்பைக்கான சிறப்பு கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென மைதானத்தின் உள்ளே 2 குண்டுகளும் சிறிது நேரத்தில் மைதானத்தின் வெளியே 2 குண்டுகளும் வெடித்துள்ளன. இதனால் 8 பேர் பலியானதாகவும் மேலும் 45 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க தலிபான் அமைப்பு மறுத்துள்ள நிலையில் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி புனிதமான ரம்ஜான் மாதம் என்றும் கருதாமல் ஒரு விளையாட்டு மைதானத்தில் இது போன்ற வெறித் தனமான தாக்குதலை நடத்துபவர்கள் நிச்சயம் மனிதாபிமானமற்ற தீவிரவாதிகளே என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.