உலகம்
Typography

பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமான பிரபல சுற்றுலாத் தீவான ஹாவாயில் கடந்த இரு வாரமாக அங்குள்ள எரிமலை வெடித்து மிகவும் ஆக்டிவாக லாவா குழம்பைக் கக்கி வருகின்றது.

சனிக்கிழமை 3 ஆவது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது. இதனால் வளிமண்டலத்தில் மிகுந்த உயரத்துக்கு வெளியாகும் கரும் புகை மற்றும் லாவா இன் பாதிப்பில் இருந்து தப்பிக்க பல ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.

தற்போது இந்த எரிமலைக் குழம்பு மிகவும் பாரியளவில் பசுபிக் பெருங்கடலில் கலந்து வருவதால கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலும் சுற்றுச் சூழலுக்குக் கடும் மாசும் ஏற்படவுள்ளதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2 வருடங்களாக ஆக்டிவாக இருந்த எரிமலை தற்போது தான் மிகவும் தீவிரமாக லாவா இனை கக்கி வருகின்றது. இதனால் இன்னும் ஆயிரக் கணக்கான மக்களை மீட்பதில் கடும் சிரமத்தை மீட்புப் படையினர் எதிர் நோக்கி வருகின்றனர். 1975 முதற் கொண்டு வெடிக்கும் நிலையில் இருந்த கிலாயூ என்ற எரிமலை தான் தற்போது மிகவும் தீவிரமாக வெடித்துள்ளது.

நூற்றுக்கும் அதிகமான வீடுகளும் கட்டடங்களும் எரிமலை வெடிப்பால் இடிந்துள்ளதுடன் 2500 பேர் வரை முதற்கட்டமாக அவசர அவசரமாக வெளியேற்றப் பட்டனர். இதில் பலர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப் படும் போதும் இப்போதைய நிலையில் மீட்புப் படையினருக்கு இவர்களது சடலங்களை மீட்பதோ எண்ணிக்கையைக் கணிப்பதோ இயலாத காரியம் என அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும் இயன்ற வரை பொது மக்கள் மீட்கப் பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டு வருகின்றனர்.

இதேவேளை பசுபிக் கடலோரம் அமைந்துள்ள இந்த கிலாயூ எரிமலை வெடித்ததால் முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் பசுபிக் கடலின் நடுப்பகுதி வரை இதன் குழம்பு கலந்துள்ளது. இது தொடர்பான புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளன. எரிமலைக் குழம்புடன் சேர்ந்து வெடித்துச் சிதறிய பாறைகள், சில மனித உடல்கள், வாகனங்கள், வீடுகள் மற்றும் இரும்புப் பொருட்கள் என்பனவும் பசுபிக் கடலில் கலந்துள்ளன. இதனால் ஏற்படக் கூடிய மாசை எவ்வாறு தவிர்ப்பது என தீயணைப்பு வீரர்கள் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் இன்னொரு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அதாவது பசுபிக் சமுத்திரத்தில் எரிமலைக் குழம்பால் ஆவியான நீராவிப் படலம் வளிமண்டலத்தில் கலந்து பல மோசமான வாயுக்கள் அதில் நிறைந்துள்ளன. இதனால் மனிதர்களுக்கு மிகப் பெரிய அளவில் சுவாசக் கோளாறும் நச்சுப் பாதிப்பும் ஏற்படலாம் என அஞ்சப் படுகின்றது. எனவே இந்த வளி மாசடைந்த பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேற்ற கடும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்