உலகம்
Typography

அண்மையில் 2015 ஆம் ஆண்டு முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மேற்குலகுடன் ஈரான் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாபஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கிடைக்கும் நண்மைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய யூனியன் போதுமான ஆதரவையோ செயற்பாட்டையோ மேற்கொள்ளவில்லை என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவின் சக்தி மற்றும் காலநிலைப் பிரிவின் கமிசனரான மிகுவேல் அரியாஸ் கனெட் என்பவரிடமே ஈரான் வெளியுறவு அமைச்சர் இக்குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் மிகுவேல் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுடன் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை விரைவில் பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் நிதிப் பொறிமுறையில் இருந்து வெளியேறி ஈரானின் மத்திய வங்கியுடன் நேரடி யூரோவைப் பயன்படுத்தி இதைத் தக்க வைக்க ஐரோப்பா முன் வர வேண்டும் என் டெஹ்ரான் எதிர்பார்ப்பதாதக் கூறியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து இவ்விவகாரத்தில் ஐரோப்பாவின் அரசியல் ஒத்துழைப்பு போதாது என்று மொஹம்மட் ஜாவட் ஷரீஃப் டெஹ்ரானில் வைத்து மிகுவேல் இடம் தெரிவித்துள்ளார். மே 8 ஆம் திகதி ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் ஈரானுடனான பொருளாதாரத் தடைகள் மறுபடியும் அமுலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்