உலகம்
Typography

எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறுவது என ஒழுங்காகி இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு ஆத்திரமூட்டும் வார்த்தைப் பிரயோகங்கள் காரணமாக ரத்தாகி உள்ளது.

இதனால் உலக அமைதிக்கே வழி வகுக்கும் என சர்வதேசத்தால் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ஒரு நடவடிக்கை நின்று போயுள்ளது.

கிம் ஜொங் உன்னுக்கு வெள்ளை மாளிகையில் இருந்து உத்தியோக பூர்வ கடிதத்தின் மூலம் டிரம்ப் தனது முடிவைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதில் மிக வெளிப்படையாக ஆத்திரமூட்டும் வகையில் வடகொரியா கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் இந்த நிலையில் பேச்சுவார்த்தை நன்றாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடகொரியாவை விட மிகவும் வலிமையான அதிக எண்ணிக்கையிலான அணுவாயுதப் பலம் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் இதனால் வடகொரியா மீண்டும் அலட்சியத்துடன் ஆக்கிரமிப்புப் போக்கைக் காண்பித்தால் அமெரிக்க இராணுவம் தயாராகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு ரத்தாவது கவலை அளிக்கின்றது என்றும் இது நிச்சயம் ஒரு தவற விடப் பட்ட சந்தர்ப்பமே என்றும் தெரிவித்த டிரம்ப் மேலும் அண்மையில் வடகொரியா அமெரிக்கக் கைதிகளை விடுவித்தது வரவேற்கத் தக்கது என்றும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வடகொரிய வெளியுறவு அமைச்சர் இடையே வார்த்தைப் போர் முற்றியிருந்தது. இதன் போது மைக் பென்ஸ் லிபியாவின் கடாஃபியைப் போன்ற நிலை தான் கிம்முக்கு ஏற்படும் என்றும் பதிலுக்கு வடகொரிய வெளியுறவு அமைச்சர் மைக் பென்ஸ் ஒரு முட்டாள் என்றும் ஒருவரை இன்னொருவர் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்