உலகம்
Typography

கடந்த சில வருடங்களாக மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து அந்நாட்டு இராணுவம் மற்றும் அரசு இணைந்து திட்டமிட்டு நடத்திய இனவழிப்பில் இருந்து தப்பிக்க இலட்சக் கணக்கான றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வந்தருந்தனர்.

தற்போது ராக்கைனில் வன்முறைகள் குறைவடைந்த போதும் இந்த அகதிகளை மீளப் பெறுவதில் மியான்மார் தாமதம் காட்டி வருகின்றது.

மறுபுறம் அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த வங்கதேச அகதிப் பாசறைகளில் தங்கி உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அந்நாடு திண்டாடி வருகின்றது. இந்நிலையில் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள றோஹிங்கியா அகதி முகாம்களில் ஒரு நாளைக்கு மாத்திரம் 60 குழந்தைகள் பிறப்பதாக ஐ.நா குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெஃப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு முதல் கணக்கில் எடுத்தால் கூட கடந்த 9 மாதங்களில் இந்த முகாம்களில் 16 000 இற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தன என்றும் இதில் வெறும் 3000 குழந்தைகள் மாத்திரமே சுகாதார வசதிகளுடன் பிறந்துள்ளன என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

தற்போது வங்கதேசத்தில் 7 இலட்சம் றோஹிங்கியா அகதிகள் தஞ்சமைடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்