உலகம்

2014 ஜூலை 17 ஆம் திகதி ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் சென்ற எம் எச் 17 மலேசியப் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஏவுகணை ரஷ்யாவின் இராணுவ யூனிட்டில் இருந்து ஏவப் பட்டது தான் என சர்வதேச விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் ஒரு விரிவான வீடியோ பகுப்பாய்வும் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதில் அதில் பயணித்த 298 பயணிகளும் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நெதர்லாந்து நேஷனல் போலிஸ் வில்பர்ட் பாலிஸன் என்ற சர்வதேச விசாரணை அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட தகவலில் ரஷ்யாவின் கர்ஸ்கிலிருந்து 53 ஆவது விமானத் தாக்கு படைப் பிரிவில் இருந்து தான் இந்த ஏவுகணை ஏவப் பட்டதாக உறுதிப் படுத்தியுள்ளது.

கிழக்கு உக்ரைன் வானில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்ட போது உலகே கடும் அதிர்ச்சிக்கு ஆளானது. மேலும் இதற்கு நாம் காரணமல்ல என்று இதுவரை ரஷ்யா மறுப்புத் தெரிவித்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.