உலகம்
Typography

 

கனடாவின் டொரொண்டோ நகரில் அமைந்துள்ள பொம்பே பெல் என்ற இந்திய உணவு விடுதி ஒன்றில் வியாழக்கிழமை இரவு 10:30 மணிக்கு குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.

இதில் 15 இந்தியர்கள் காயம் அடைந்ததாக கனேடிய போலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதமா அல்லது தனிப்பட்ட பழி வாங்கும் எண்ணமா உள்ளது என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்த மேலதிக தகல்களைப் பெறத் தாம் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

IED ரக குண்டு பாவிக்கப் பட்ட இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு ஆண்களைத் தாம் தேடி வருவதாக கனேடிய போலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 3 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. குண்டு வெடிப்பு இடம்பெற்ற போது பலர் உணவு விடுதிக்குள் இருந்த போதும் யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பஞ்சாப் முதல்வர் அமரீண்டர் சிங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS