உலகம்
Typography

 

கத்தோலிக்க மிதவாதம் நிறைந்த ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் இன்று வெள்ளிக்கிழமை கருக்கலைப்பு சட்டத்துக்கு அனுமதி கோரும் வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது.

இந்த சட்டம் தொடர்பான விவாதம் பொது மக்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாகவே சூடு பிடித்திருந்த நிலையில் தற்போது இந்த வாக்கெடுப்பில் 3.5 மில்லியன் மக்கள் பங்கேற்கின்றனர். இது தொடர்பில் கருத்துக் கணிப்புக்கள் முன்னதாக இடம்பெற்றுள்ள போதும் நிபுணர்கள் தெரிவித்த கருத்தில் வாக்கெடுப்பின் முடிவு பெரும்பாலும் பாதகமாக அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பாபில் கலாச்சார அடிப்படையில் மிகவும் உறுதியாகக் கத்தோலிக்க மதக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் நாடுகளில் அயர்லாந்தும் ஒன்றாகும். ஆனால் இங்கு சமீப காலமாக மத குருமார் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்த வழக்குகள் எழுந்ததால் கடந்த சில வருடங்களாக கத்தோலிக்கத் தேவாலயங்களின் செல்வாக்கு இங்கு வீழ்ச்சியடைந்து வருகின்றது.

குடும்பங்களின் ஒருங்கிணைப்பு சந்திப்புக்காக போப் பிரான்சிஸ் 3 மாதங்களுக்கு முன்பு தான் அயர்லாந்துக்கு வந்து சென்றிருந்தார். கத்தோலிக்கத் தேவாலயத்தின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஒரினச்சேர்க்கை திருமணத்துக்கான சட்டம் தொடர்பில் 3 வருடங்களுக்கு முன்பு அயர்லாந்தில் வெற்றிகரமாக வாக்கெடுப்பு நிகழ்த்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்