உலகம்
Typography

 வியாழக்கிழமை வடகொரியாவின் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் காரணமாக ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் ஏற்படாகி இருந்த அமெரிக்க வடகொரிய அதிபர்கள் சந்திப்பை டிரம்ப் ரத்து செய்து அறிவித்திருந்தார்.

இதற்கு வடகொரியாவிடம் இருந்து நேர்மறைப் பதில் வந்துள்ளது. அதாவது எந்த நேரத்திலும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 12 சந்திப்பை டிரம்ப் ரத்து செய்தது வருத்தம் அளிப்பதாக வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டிரம்ப் வெளியிட்டிருந்த கடிதத்தில் இன்னொரு உகந்த நாளில் வடகொரியாவுடன் பேசுவோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கு முன்பு வடகொரியா பேச்சுவார்த்தைக்காக கெஞ்சப் போவது கிடையாது என்றும் ராஜ தந்திர முயற்சிகள் தோல்வி அடைந்தால் பரஸ்பரம் அணுசக்தி மோதல்கள் இடம்பெறலாம் என்றும் வடகொரியாவின் கிம் ஜொங் உன்னின் உயர்மட்ட ஆலோசகர்களில் ஒருவரான சோ சன் ஹுய் கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்ததற்கு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் கவலை தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்