உலகம்

ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே நடைபெறத் திட்டமிடப் பட்டிருந்த நேரடி சந்திப்பு வடகொரிய தரப்பிலான ஆத்திரமூட்டும் பேச்சுவார்த்தைகளால் ரத்து செய்யப் படுவதாகக் அந்நாட்டு அதிபருக்கான கடிதம் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கு நேர்மறையாகப் பதில் அளித்த வடகொரியா அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் கிம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தது. இதை அடுத்து வடகொரிய அதிபர் கிம்மை சந்திப்பது தொடர்பில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமது நாட்டில் உள்ள அணுவாயுத சோதனைக் கூடத்தைத் தகர்ப்பது போன்ற ஒரு வீடியோவையும் வடகொரியா வெளியிட்டிருந்தது.

மேலும் இரு நாட்டுக்கும் இடையேயான ஆக்கபூர்வமான சந்திப்பை ஒழுங்கு செய்வதற்காகத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உம் வியாழக்கிழமை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையை நடத்தியிருந்தார். தற்போது வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே சுமுக நிலை நிலவுவதால் ஏற்கனவே திட்டமிட்ட படி ஜுன் 12 இல் சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கவும் வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப் படுகின்றது.

இதேவேளை தம்மிடமுள்ள எல்லா அணுவாயுதங்களையும் வடகொரியா துறக்க கிம் சம்மதிக்கின்றாரா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இதற்கு வாஷிங்டனின் உத்தரவாதமும் அவசியம் என்பதால் இது தொடர்பில் அமெரிக்க வடகொரியத் தலைவர்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் கூறியுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.