உலகம்
Typography

நிலவில் கால் பதித்து நடமாடிய 4 ஆவது விண்வெளி வீரரான ஆலன் பீன் சனிக்கிழமை அமெரிக்காவின் ஹௌஸ்டனில் காலமாகி உள்ளார்.

இது குறித்து நாசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பீன் ஒரு ஓய்வு பெற்ற அமெரிக்கக் கடற்படை கேப்டன் என்றும் அவர் ஒரு உத்தியோகபூர்வ கலைஞர் என்றும் இரு கிழமைகளுக்கு முன்பு இந்தியானாவுக்குச் சென்றிருந்த போது சுகயீனமுற்று சனிக்கிழமை உயிர் நீத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆலன் பீன் மரணமடையும் போது அவரின் வயது 86 ஆகும். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 1969 முதல் 1972 வரை கிட்டத்தட்ட 12 தடவை மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி வெற்றிகரமாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தது. அதன் பின் இன்று வரை சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வுப் பணியைச் செய்யும் நோக்கில் நாசா மனிதர்களை அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1969 நவம்பரில் அப்போலோ 12 விண்கலத்தில் நிலாவுக்கான 2 ஆவது பயணத்தில் இணைந்த ஆலன் பீனும் கமாண்டர் சார்லெஸ் பீட் ஆகிய இருவரும் சந்திரனில் கால் பதித்த 3 ஆவது மற்றும் 4 ஆவது மனிதர்கள் ஆவர். இதன்போது ஆலன் பீன் கிட்டத்தட்ட 31 மணித்தியாலம் நிலாவில் நடமாடினார். இந்த நிலவுக்கான பயணம் தவிர்த்து நாசாவின் விண்வெளி ஆய்வு மையமான ஸ்கைலாப் இன் பயணத்திலும் இவர் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS