உலகம்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதுவரைக்கும் இடைக்கால பிரதமராக முன்னால் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

இத்தகவலை பாகிஸ்தானின் பிரதமர் ஷாகித்கான் அப்பாஸி என்பவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சமீப காலமாக பிரதமர் நியமனம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் கட்சிக்கும் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் தலைவர் சையத் குர்ஷித் அகமது ஷா என்பவருக்கு இடையேயும் இடம்பெற்ற கடுமையான வாக்குவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது இடைக்காலப் பிரதமராக முன்னால் நீதிபதியே நியமிக்கப் பட்டிருப்பதால் யாரும் குறை கூற முடியாது என அப்பாஸி கூறியுள்ளார். நாசிர் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இடைக்காலத் தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் வியாழக்கிழமை பாகிஸ்தானின் நாடாளுமன்றமும் தற்போதைய அரசும் கலைக்கப் படவுள்ளது.

தேர்தல் இடம்பெற்று புதிய அரசு பதவியேற்கும் வரை எந்தவித முக்கிய முடிவையும் இடைக்கால அரசு எடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், குழப்பகரமானதாக மாறிவிட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

பாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய - சீனா இடையில் நடைபெற்றுவரும் எல்லைப்பகுதிக்கு விஜயம் செய்திருப்பதாகவும் இந்த திடிர் ஆய்வு உலக கவனம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.

அண்மையில் ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து காத்மண்டு கங்காலால் தேசிய இருதய மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி விரைவில் பணிக்குத் திரும்புவார் என்றும் அதன் பின் மக்களிடம் பேசுவார் என்றும் அவரின் செய்தி ஆலோசகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.