உலகம்
Typography

மே 28 திங்கட்கிழமை உலக பசி தினமாகும்.

இன்றைய உலகில் பசியால் வாடி மனிதனின் நேசக் கரம் கொடுக்கப் படாது இறக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் தலை விதியை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து அறிவார்ந்த சமூகம் சிந்திப்பதற்காகவே இத்தினம் கொண்டாடப் படுகின்றது. உலகில் உணவு கிடைக்காது மிகப் பெரிய மக்கள் தொகை பரிதவித்துக் கொண்டிருக்க மறுபுறம் உணவு பாரியளவில் வீணடிக்கப் படுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றது.

இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் உலகப் பசி தினம் அனுட்டிக்கப் படுகின்றது. உலகம் முழுதும் போதிய உணவு கிடைக்காதது தான் 50% வீத குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் என்பதை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள். அதிலும் இதில் 60% வீதமானவர்கள் பெண்கள் என்றும் எயிட்ஸ், மலேரியா, காசநோய் இவற்றால் இறப்பவர்களை விட பசியால் இறப்பவர்கள் தொகை அதிகம் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. உலக அளவில் பசியால் அதிகம் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் உள்ளன.

இந்தியாவில் உணவுக்கான உரிமை சட்ட பாதுகாப்பு கொண்ட அடிப்படை உரிமையாகும். ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்குத் தினசரி அவனுக்கு 2100 கலோரி உணவின் வாயிலாகக் கிடைக்க வேண்டும் என்பது ஐ.நா இன் வரையறை ஆகும். உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 98% வீதம் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆசியாவில் ஆப்கான் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS