உலகம்
Typography

உலகம் முழுதும் யுத்தப் பிரதேசங்கள், அதனால் பாதிக்கப் பட்ட பிரதேசங்கள் மற்றும் வறிய நாடுகளில் ஐ.நா சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவில் சர்வதேசத்தைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் பங்கேற்று செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐ.நா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கடந்த 70 வருடங்களில் இந்த அமைதி காக்கும் படையில் பலதரப் பட்ட பணிகளின் போது பலியானவர்களில் மிக அதிகமானவர்கள் இந்திய வீரர்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய இராணுவம், போலிஸ் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 163 பேர் இவ்வாறு தமது உயிரைத் துறந்துள்ளனர். மேலும் ஐ.நா அமைதி காக்கும் படையில் 1948 ஆம் ஆண்டு முதல் 3 737 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் இதில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 163 பேர் பலியாகி உள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும் அப்யெய், சைப்ரஸ், கொங்கோ, ஹைட்டி, லெபனான், மத்திய கிழக்கு, தென் சூடான் மற்றும் மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் நிகழ்காலத்தில் பணியாற்றி வரும் 6 693 ஐ.நா அமைதி காக்கும் வீரர்களில் 3 ஆவது அதிகபட்ச வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனினும் பதிலுக்கு 2018 ஏப்பிரல் 30 ஆம் திகதி வரையில் ஐ.நா சபை இந்தியாவின் அமைதி காக்கும் துருப்புக்கள், போலிஸ் யூனிட்டுக்கள் ஆகியோருக்கு $92 மில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஐ.நா சபை தனது அமைதி காக்கும் படைப் பிரிவின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி இருந்தது. இதன் போது பணியில் உயிரிழந்தவர்கள் நினைவு கூரப் பட்டார்கள். தற்போது ஐ.நா அமைதிப் படைப் பிரிவில் 124 நாடுகளைச் சேர்ந்த 96 000 சீருடை அணிந்த வீரர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 15 000 இற்கும் அதிகமான பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் 1600 ஐ.நா தன்னார்வப் பணியாளர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS