உலகம்
Typography

புதன்கிழமை காலை 10:30 மணிக்கு பெல்ஜியத்தின் தலைநகர் புருஸெல்ஸில் இருந்து 100 Km தொலைவில் உள்ள லீய்ஜ் என்ற நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தி 2 போலிசாரையும் இன்னொரு குடிமகனையும் கொலை செய்துள்ளான்.

பதிலுக்கு உடன் வந்த போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த மர்ம நபரும் கொல்லப் பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதம் உள்ளதா என்று இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. ஆனால் குறித்த மர்ம நபர் யார்? அவனின் நோக்கம் என்ன என்பது தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெல்ஜியத்தின் தொழிற்துறை நகரான லீஜில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து போலிசார் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர்.

காலை 10:30 மணிக்கு பள்ளி அருகே வந்த மர்ம மனிதன் முதலில் போலிசாரைக் கத்தியால் தாக்கினான். பின்பு அவர்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து எடுத்து அவர்களை நோக்கிச் சுட்டதில் இரு போலிசார் பலியானார்கள். பின்பு அந்த இளைஞன் காரில் அமர்ந்திருந்த ஒருவரையும் சுட்டுக் கொன்றான். அதன் பின் அக்காரில் ஏறி பள்ளிக்குள் காரைச் செலுத்திய பின் அங்கு உள்ளே சென்று துரத்தி வந்த போலிசாரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்த பெண்மணி ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டான். மேலும் சராமரியாக ஏனையவர்களை சுட்டதில் பலர் காயம் அடைந்தனர்.

இறுதியில் போலிசார் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் திட்டமிடப் பட்ட விதம் நிச்சயம் இது ஒரு தீவிரவாதத் தாக்குதலாகத் தான் இருக்க முடியும் எனப் போலிசார் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் சமீப காலமாகத் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் முக்கிய நாடுகளில் பெல்ஜியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்