உலகம்
Typography

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று அண்மையில் வெளியானது.

இதில் சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவின் மாநிலச் செயலாளர் மைக் பாம்போ தனது கருத்தினைத் தெரிவித்திருந்தார். இதில் இவ்வாறு கூறப் பட்டுள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மை மதத்தினர் அதிகளவில் பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தனர் எனப் பட்டுள்ளது.

முக்கியமாக மத வன்முறைகளையும் அதனால் கொல்லப் பட்டவர்களையும் தான் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களைக் கண்டிப்பதோடு மாத்திரம் அரசு நின்று விடுவதாகவும் ஆனால் உள்ளூர் அரசியல் வாதிகளால் தூண்டி விடப் படும் மத வன்முறைகளைக் கட்டுப் படுத்த அரசு தவறி வருவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2017 முதல் 6 மாதங்களில் மாத்திரம் கிறித்தவர்களுக்கு எதிராக 410 வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. கடந்த ஜனவரி முதல் மே மாத்திரம் மத ரீதியாக 296 வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 44 பேர் கொல்லப் பட்டும் 892 பேர் காயமடைந்தும் உள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்