உலகம்
Typography

அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் ஆகியோர் சந்திக்கவுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக வடகொரிய அதிபரின் வலது கை என்று அறியப் படும் உயர் அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும் அவர் நியூயோர்க்கில் வைத்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ இனை சந்தித்துள்ளார்.

சீனா வழியாக வந்த ஜெனரல் கிம் யாங் சால் என்ற இந்த அதிகாரி பாம்பேயோவுடன் உணவருந்தியும் உள்ளார். இவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது உச்சிமாநாடு நடக்க முன்பு வடகொரியா அணுவாயுதப் பயன்பாட்டைக் குரைத்துக் கொள்வது இரு தரப்புக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் என்றும் இணக்கம் எட்டப் பட்டது. வடகொரியாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்கா வருவது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 12 சிங்கப்பூர் சந்திப்பில் டிரம்ப் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ள போதும் திட்டமிட்ட படி அச்சந்திப்பு நடைபெற இவ்விரு அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் சந்திப்பு நியூயோர்க் ஐ.நா தலைமையகம் அருகே புதன்கிழமை மாலை இடம்பெற்றது. ஏற்கனவே கொரியத் தீபகற்பத்தில் சுமுக நிலையை ஏற்படுத்த இரு நாட்டு உயர் அதிகாரிகளும் எல்லையில் உள்ள பன்முஞ்சோம் நகரில் அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.

மறுபுறம் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வியாழக்கிழமை வடகொரியத் தலைநகர் பியாங்யாங் இற்கு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்