உலகம்
Typography

கடந்த ஆண்டு செப்டம்பரில் போர்ட்டோ ரிக்கோவை மரியா புயல் துவம்சம் செய்திருந்தது. இதில் 64 பேர் மாத்திரமே பலியானதாக அந்நாட்டு அரசு உண்மையை மூடி மறைத்துள்ளது.

அதாவது அண்மையில் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் செப்டம்பரில் போர்ட்டோ ரிக்கோவில் தாக்கிய மரியா புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4600 இற்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அரசு அறிவித்த உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட 70 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹார்வார்டு ஆய்வின் பிரகாரம் இப்புயலில் பலியானவர்களில் 1/3 வீதமானவர்கள் மருத்துவ வசதி இல்லாததாலும், மின்சாரம் துண்டிக்கப் பட்டு பாதிக்கப் பட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் தடைப் பட்டதாலும் ஏற்பட்ட பாதிப்பால் பலியானவர்கள் என்றும் தெரிய வருகின்றது.

2017 செப்டம்பரில் தாக்கிய மரியா புயலின் தாக்கம் அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா மாகாணங்கள் மற்றும் கரீபியன் கடலில் உள்ள தீவான போர்ட்டோ ரிக்கோ நாடு ஆகியவற்றில் கடுமையாக உணரப் பட்டது. கடந்த 90 ஆண்டுகளில் ஏற்படாத மிகவும் வலுவான புயலாக இந்த மரியா புயல் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்