உலகம்
Typography

உலகில் பெண்களுக்கென இறுக்கமான சட்ட திட்டங்களைக் கொண்ட இஸ்லாமிய நாடாக விளங்கி வந்த சவுதி அரேபியாவில் சமீப காலமாக அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானின் நடவடிக்கையால் மாற்றங்கள் ஏற்பட்டன.

அதாவது முடிக்குரிய இளவரசரான பின் சல்மானின் அதிரடி நடவடிக்கையால் அங்கு பெண்களுக்கு ஆண்களுக்கு இணையாக வாகனம் ஓட்டவும், திரையரங்கில் சினிமா பார்க்கவும், விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசிக்கவும் அனுமதி அளிக்கப் பட்டது. ஏற்கனவே சவுதியில் பெண்களுக்கு முகம், உடல் தெரியும் படி ஆடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து வருகின்றது.

இந்நிலையில் பெண்களுக்கான சட்ட திட்டங்களைத் தளர்த்தியதால் இளவரசர் முகமது பில் சல்மானுக்கு யேமெனில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பெண்களுக்கான சுதந்திரத்தைக் கண்டித்த அல்கொய்தா இதன் மூலம் மேற்கத்தேய மதச்சார்பின்மை கொள்கை பரவுவதாகவும், ஒழுக்கக் குறைவு மற்றும் ஊழல் ஏற்படவும் வழி பிறப்பதாகக் கூறப்பட்டுள்ளது. புனித மெக்காவுக்கு அருகே உள்ள ஜெத்தாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விரெஸ்லிங் போட்டி நடப்பதாகவும் இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடலைத் திறந்து காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதனால் மதத்துக்கு விரோதமான பாவ காரியங்கள் நடப்பதாக அல்கொய்தாவின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்