உலகம்
Typography

திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உம் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர்.

இது தொடர்பான அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானதை அடுத்து சிங்கப்பூரில் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் சில வித்தியாசமான ஆனால் பாதுகாப்பு நோக்கம் கொண்ட விதிமுறைகளும் அமுல் படுத்தப் படவுள்ளன.

வழமையாக சிங்கப்பூருக்கு அரசமுறைப் பயணம் வரும் தலைவர்கள் தங்கும் ஷங்கிரி லா என்ற ஹோட்டலில் தான் கிம் மற்றும் டிரம்ப் ஆகியோரும் சந்திக்கவுள்ளனர். இங்கு இரு நாட்டு அதிபர்களும் தமது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வரவுள்ளனர். இது சர்வதேசத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சந்திப்பு மற்றும் அணுவாயுதத்தைக் கை விடுவது தொடர்பில் வடகொரியாவின் திட்டம் பற்றித் தெரிய வரவுள்ளதால் இந்த சந்திப்பின் போது ஷங்கரி லா ஹோட்டலுக்குக் கீழே கிட்டத்தட்ட 2500 சர்வதேச பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் கூடவுள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகளை குறித்த ஊடகங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டன.

பாதுகாப்பு நடவடிக்கையின் அம்சமாக போலிசார் மற்றும் இராணுவம் தவிர்த்து ஏனையவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் சந்திப்பு இடம்பெறும் ஜூன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜூன் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்து இருக்காது என்றும் எந்த நாட்டில் இருந்தும் விமானம் மூலம் யாரும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அனுமதி இல்லாது நுழையக் கூடிய ராக்கெட்டுக்களை வடகொரியா ராக்கெட்டுக்கள் மூலம் சுட்டு வீழ்த்தவும் முன்னேற்பாடாகி உள்ளது. இது தவிர ஜூன் 7 தொடக்கம் ஜூன் 13 வரை சிங்கப்பூரில் பெரிய போஸ்டர்கள் ஒட்டுவதற்கோ பெயிண்ட் விற்பனை செய்வதற்கோ தடை விதிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடகொரிய அதிபரைத் தான் நேரில் சென்று சந்திக்கவுள்ளதாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத் தீர்மானித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் எந்தத் திகதியில் எந்தவிடத்தில் இச்சந்திப்பு இடம்பெறும் என்பது தொடர்பில் இன்னமும் தகவல் வெளியாகவில்லை.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS