உலகம்

சமீபத்தில் வெளியிடப் பட 2018 ஆம் ஆண்டுக்கான பூகோள சமாதானப் பட்டியலில் உள்ள 163 இந்தியாவுக்கு 137 ஆவது இடம் கிடைத்துள்ளது.

மேலும் கடந்த வருடத்தை விட இந்தியா இவ்வருடம் 4 படிகள் முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக இந்தியாவில் நடைபெறும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்கள் கடுமையான சட்ட திட்டங்களால் குறைக்கப் பட்டமையே காரணம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்த்ல் ஐஸ்லாந்தும் கடைசி இடத்தில் சிரியாவும் உள்ளன. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அமைப்பால் வருடாந்தம் வெளியிடப் படும் இந்த பட்டியலில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. மேலும் இவ்வருடத்தில் ஐஸ்லாந்துக்கு அடுத்த முதல் 5 இடங்களுக்குள் நியூசிலாந்து, ஆஸ்ட்ரியா, போர்த்துக்கல் மற்றும் டென்மார்க் ஆகியவை உள்ளன. மேலும் கடந்த 5 வருடங்களாக சிரியா தான் கடைசி இடத்தில் அதாவது மிகவும் வன்முறை கூடிய நாடாக உள்ளது. சிரியாவுக்கு முன்னதாக இந்த வன்முறை அதிகம் உள்ள 5 நாடுகளில் ஆப்கானிஸ்தான், தென் சூடான், ஈராக் மற்றும் சோமாலியா ஆகியவை உள்ளன.

சிட்னி நகரைத் தளமாகக் கொண்டு இந்த ஆய்வை நடத்திய IEP என்ற பொருளாதாரத்துக்கும் சமாதானத்துக்கும் ஆன கல்வி நிலையம் மேற்கொண்ட இந்த கணிப்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீப காலமாக எல்லையில் காஷ்மீரில் வன்முறை அதிகரித்துள்ளதாகவும் இதனால் இரு நாடுகளிலும் பலர் பலியாகி வருவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இந்த சமாதானப் பட்டியலில் இந்தியாவைப் போன்றே வன்முறைகளால் இறப்பு வீதம் குறைந்த நாடுகளில் இலங்கை, சாட், கொலம்பியா மற்றும் உகண்டா ஆகியவை உள்ளன.