உலகம்
Typography

2015 ஆமாண்டு சர்வதேசத்துடன் மேற்கொள்ளப் பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உட்பட்டு யுரேனியம் செறிவூட்டலை மீளவும் ஆரம்பிக்கப் போவதாக ஈரான் ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

அண்மையில் தான் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் ஈரான் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மாத்திரமே பயன் படுத்துவோம் என ஈரான் உடன்படிக்கை செய்து கொண்டதால் அதன் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய போதும் ஐரோப்பிய யூனியன் இன்னமும் ஈரானுடன் குறித்த அணுசக்தி ஒப்பந்தத்தில் நீடித்து வருகின்றது.

இந்நிலையில் தான் ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதொல்லா அலி கமேனி இரு நாட்களுக்கு முன்பு தனது நாட்டில் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்