உலகம்
Typography

எதிர்வரும் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப் படும் என ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் ISIS போன்ற தீவிரவாத அமைப்புக்களுடனான போர் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் ஜூன் 12 முதல் 19 ஆம் திகதி வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்றுள்ளார்.

ஆனால் இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது மறுப்புத் தெரிவித்தோ தலிபான்கள் தரப்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. எனினும் இது தொடர்பில் உயர் மட்டத் தலைவர்களுடன் பேசி வருவதாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

மறுபுறம் கடந்த 20 வருடங்களாக வெள்ளை மாளிகையில் இருந்து வந்த இப்தார் விருந்து கொடுக்கும் பழக்கத்தை கடந்த வருடம் அதிபர் டிரம்ப் நிறுத்தியிருந்தார். ஆனால் திடீர் மனமாற்றம் காரணமாக வெள்ளை மாளிகையில் இவ்வருடம் இப்தார் விருந்தை முஸ்லிம் சமூகத்தினருடன் பகிர்ந்து கொள்ள டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 30 அல்லது 40 விருந்தாளிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்ட இந்த விருந்தினை பெரும்பாலான முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்