உலகம்
Typography

கனடாவில் கஞ்சாவைப் பயிரிட்டு விற்பனை செய்வதற்கும் வாங்கிப் பயன்படுத்தவும் சட்ட ரீதியில் அனுமதி அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இதற்கு அனுமதி அளிக்கும் மனு ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரத்தையும் பெற்று விட்டால் கனடாவில் கஞ்சாவை சட்ட ரீதியாக புகையிலை மற்றும் மது போன்று எங்கும் பெற முடியும். கனடாவில் ஏற்கனவே மருத்துவத் தேவைக்கு கஞ்சா பாவிக்கும் அனுமதி உள்ளது.

இதேவேளை கஞ்சா பாவனை சட்ட ரீதியாவது தொடர்பில் கனடா வாழ் மக்கள் நேர் எதிர் மறைக் கருத்துக்களையும் கவலைகளையும் தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக இளைஞர்களுக்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன் இதை எப்படிப் பாவிப்பது என்பது தெரியாது என்றும் அதிகளவு கஞ்சா பாவனை மார்பு நோய் மற்றும் புற்று நோய்களை ஏற்படுத்தக் கூடியது என்றும் கூறியுள்ளனர்.

வேறு சிலர் கூறுகையில் சட்ட ரீதியில் விற்க அனுமதிப்பது குறைந்த பட்சம் தரமான கஞ்சா பாவனைக்கு வழி வகுக்கும் என்றுள்ளனர். மேலும் மருத்துவத் துறையில் வலியால் துடிப்பவர்களுக்கு இது உதவுவதால் அதற்கு அனுமதிக்கப் பட்டது என்றும் அது போதுமானது. உற்சாகத்துக்காக இதைப் பாவிப்பது போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி விடும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்