உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை ஜூன் 12 ஆம் திகதி உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க வடகொரிய அதிபர்களின் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று திங்கள் பின்னிரவு சிங்கப்பூர் நகரின் முக்கிய சில பகுதிகளை வடகொரிய அதிபர் கிம் சுற்றிப் பார்த்தார்.

மேலும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஒங் யே குங் ஆகியோருடன் செல்ஃபீ புகைப் படமும் எடுத்துக் கொண்டார்.

இந்த செல்ஃபீ இனை பாலகிருஷ்ணன் தனது டுவீட்டரில் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் கூரைக்கு மேல் முழுநகரமும் தெரியும் விதத்தில் அமைக்கப் பட்ட நீச்சல் குளம் அடங்கிய மரீனா பே சாண்ட்ஸ் ரிசோர்ட் என்ற விடுதிக்கு கிம் விஜயம் செய்தார். இதன் போது கிம் ஜொங் உன் இனை நேரில் பார்த்த 100 நிருபர்கள் மற்றும் பொது மக்கள் ஆரவாரம் செய்ததுடன் தமது மாபைல் போன்களில் புகைப் படமும் எடுத்துக் கொண்டனர். இதன் பின் சிங்கப்பூர் வர்த்தகத்தின் மையத்தில் உள்ள துறைமுகப் பகுதியினூடாக கிம் நடந்து சென்றார். இதன் போது தான் செல்ஃபீயும் எடுத்துக் கொண்டார்.

தனது சகோதரி கிம் யோ ஜொங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ரீ யொங் ஹோ ஆகியோருடன் சிங்கப்பூர் சந்திப்புக்காக முதல் நாளே வந்திருந்த அதிபர் கிம் தற்போது செண்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவில் இருந்து கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள சிங்கப்பூர் நாடு 5.5 மில்லியன் பொது மக்களைக் கொண்டுள்ளதுடன் அமெரிக்கா, வடகொரியா மற்றும் சீனாவுடன் பாரபட்சமற்ற உறுதியான உறவைப் பேணி வருகின்றது. இதனால் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இந்நாடு தேர்ந்தெடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி அதனால் உலகில் அமைதி ஏற்படப் பிரார்த்தனை செய்வதாக போப் பிரான்சிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்