உலகம்
Typography

மத்திய பசுபிக் கடலில் இருக்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹாவாய் தீவில் கடந்ந்த இரு வாரமாக கிலாயூ என்ற எரிமலை தொடர்ந்து வெடித்துச் சிதறி வருவதுடன் பெருமளவு கரும் சாம்பல் புகை மற்றும் லாவாவினையும் வெளியேற்றி வருகின்றது.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் இது 13 முறை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தத் தீவிர எரிமலை சீற்றம் காரணமாக லாவாக்கள் மற்றும் பாறைகளால் ஆன புதிய நிலப்பரப்பு ஒன்று உருவாகி உள்ளது.

இதனால் ஹாவாய்த் தீவின் வரைபடத்திலும் சிறிது மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் புதிதாக உருவான நிலப்பரப்பும் தமக்கே சொந்தம் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. வரலாற்றில் இல்லாதளவு இந்த முறை எரிமலை வெடிப்பின் தாக்கம் தீவிரமாக உள்ளதால் ஹாவாயில் பல இலட்சம் ஏக்கர் நிலப் பரப்பு லாவா குழம்பினால் நாசமாகி உள்ளது. மேலும் மொத்த சனத்தொகையில் 70% வீதமான மக்கள் தமது வதிவிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

1975 ஆம் ஆண்டு முதல் கிலாயூ எரிமலை வெடிக்கும் அபாயத்தில் தான் இருந்துள்ளது. இதுவரை 300 இற்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன் 50 000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் பலியாகியும் காணாமற் போயும் இருக்கலாம் என்று அஞ்சப் படும் நிலையில் இது தொடர்பான தகவலை ஹாவாய் அரச நிர்வாகம் இன்னமும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஹாவாயின் முக்கிய நகரங்களில் ஒன்றான கபோஹா என்ற பகுதியிலுள்ள பெரிய ஏரி எரிமலை செயற்பாட்டால் மொத்தமாக ஆவியாகியுள்ளதுடன் அங்கு மலைப் பாறைகள் உருகி நுழைந்து புதிய நிலப்பரப்பு உருவாகி புதிய மலை போன்று அது காணப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்