உலகம்

மொத்தம் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர்ந்த ஏனைய 10 உறுப்பு நாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப் படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு இறுதியில் நெதர்லாந்து, சுவீடன், எத்தியோப்பியா, பொலிவியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய 5 நாடுகளின் பதவிக் காலம் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு சனிக்கிழமை புதிய 5 உறுப்பு நாடுகளைத் தேர்வு செய்யும் தேர்தல் ஐ.நா சபைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் இந்தோனேசியா, ஜேர்மனி, பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா, டொமினிக் குடியரசு ஆகிய 5 நாடுகள் புதிய நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டன. இதற்கான ஓட்டெடுப்பில் ஐ.நா பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 190 நாடுகள் கலந்து கொண்டன.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர 5 உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார். 

கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் உள்ள இராணுவத் தளமொன்றின் மீது அல் ஷபாப் குழுவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் தீவிரவாதிகள் சிலர் சனிக்கிழமை நடத்திய கார்க் குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப் பட்டும், 20 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :