உலகம்

மொத்தம் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர்ந்த ஏனைய 10 உறுப்பு நாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப் படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு இறுதியில் நெதர்லாந்து, சுவீடன், எத்தியோப்பியா, பொலிவியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய 5 நாடுகளின் பதவிக் காலம் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு சனிக்கிழமை புதிய 5 உறுப்பு நாடுகளைத் தேர்வு செய்யும் தேர்தல் ஐ.நா சபைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் இந்தோனேசியா, ஜேர்மனி, பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா, டொமினிக் குடியரசு ஆகிய 5 நாடுகள் புதிய நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டன. இதற்கான ஓட்டெடுப்பில் ஐ.நா பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 190 நாடுகள் கலந்து கொண்டன.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர 5 உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.