உலகம்
Typography

கட்டாய பணச் சேகரிப்பு மோசடி, தீவிரவாத நடவடிக்கைகளுக்கான நிதியுதவி ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு (WTCC) எதிராக சுவிற்சர்லாந்து மத்திய அரசின் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முடிவு வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பணம் சேகரித்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட 12 சுவிஸ் வாழ், இலங்கைத் தமிழர்களும், ஒரு சுவிற்சர்லாந்து இனத்தவரும், இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சிறைத்தண்டனை கோரிக்கையும், நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 5 பேர் முற்றாக இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் சில நிதிமோசடிக் குற்றச்சாட்டு தண்டனைகளுக்கு மாத்திரம் ஆளாகியுள்ளனர்.

சுமார் தொடர்ந்து 8 வாரங்களாக நடைபெற்ற இவ்வழக்கு விசாரணை சுவிஸ் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இவ்வழக்கின் முடிவைப் பொருத்து, இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐரோப்பிய நாடுகளினால் பார்க்கப்படும் பார்வை மாறுபடும் அபாயம் இருந்தது. உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால், சுவிற்சர்லாந்து தமிழ் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பணம், விடுதலைப்புலிகளின் ஆயுத வளங்களை பெருப்பிப்பதற்காகவே என அரச வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனினும் அது இலங்கை அரசின் போர் வெறியால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவே பயன்பட்டதென்ற எதிர்தரப்பு வாதமே இறுதியில் வெற்றி பெற்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்