உலகம்

கடந்த 3 1/2 வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணிகளை செய்து வரும் நாசாவின் ரோவர் ஸ்பிரிட் (கியூரியோசிட்டி) மற்றும் ஆப்பர்டுனிட்டி ஆகிய விண் வண்டிகள் தற்போது தமது ஆய்வுக் காலத்தின் மிகப் பெரிய சவாலை எதிர் நோக்கியுள்ளன.

சுமார் 3 மாதங்கள் மாத்திரமே வெற்றிகரமாக இவை ஆய்வுப் பணி செய்யும் என்று கணிப்பிட்டிருந்த வேளையில் இவை 3 1/2 வருடங்கள் தொடர்ந்து செயற்பட்டதே விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியான ஒரு விடயமாகும்.

கடந்த ஒரு மாத காலமாக ரோவர் மற்றும் ஸ்பிரிட் விண்வண்டிகள் ஆராய்ச்சி செய்து வரும் பகுதியில் வீசி வரும் கடுமையான கோடைக் கால தூசுப் புயலால் அவற்றின் செயற்பாடு பாதிக்கப் பட்டிருப்பது தான் தற்போது நாசா விஞ்ஞானிகளுக்கு சவாலையும், கவலையையும் அளித்துள்ளது. ஏனெனனில் நாசா விஞ்ஞான செயற்திட்ட இயக்குனர் தெரிவித்த தகவலில் இந்த தூசுப் புயலின் வீரியத்தை சமாளிக்கும் விதத்தில் இவ்விரு விண் வண்டிகளும் கட்டமைக்கப் படவில்லை என்றும் இது தவிர இந்த தூசுப் புயல் காரணமாக ரோவர் விண்வண்டிக்கு வரும் 99% வீத சூரிய வெளிச்சம் தடைப் பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த ரோவர் ஓடம் இயங்குவதற்கு ஏற்ற சக்தி அதற்கு இல்லாமற் போயுள்ளது.

24 மணித்தியாலங்களுக்கு மேலாகத் தொடர்பை இழந்துள்ள ரோவர் வண்டியின் பாகங்கள் எதுவும் சேதமடையாது இருக்கும் பட்சத்தில் சூரிய ஒளி திரும்பக் கிடைத்தால் அது தன்னைத் தானே மறுபடி இயங்கச் செய்து விடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் சற்று நம்பிக்கை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தற்போது (இன்று சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்தியாவில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ன் நாடாளுமன்றித்தின் முன்னதாக அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரத் தொடக்கத்தில் "மாற்றத்திற்கான எழுச்சி" இன் ஆர்வலர்கள் உருவாக்கிய "காலநிலை முகாம்" வெளியேற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று வெள்ளி மாலை ஹெல்வெட்டியா பிளாட்ஸில் கூடினர்.

ஒரு பயனுள்ள தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.