உலகம்

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் 2012 ஆம் ஆண்டு மலாலா யூசுஃப் சாய் இனைத் தலையில் சுட்டவனும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவனுமான பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவன் என்று கருதப் படும் ஃபஸ்லுல்லா என்பவன் அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டு விட்டதாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஊடகத்துக்கு அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு முதல் 4 தடவைகள் இந்நபர் கொல்லப் பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த போதும் அவை நம்பகத் தன்மை அற்றுப் போயிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் ரகசியமாக ஒரு வானொலி சேவையை இவன் நடத்தி வந்ததால் முல்லா ரேடியோ என்றும் இவர் அடையாளம் காணப் படுகின்றார். ஜூன் 13 ஆம் திகதி முதல் ஆப்கான் பாகிஸ்தான் எல்லையிலுள்ள குனார் மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் தீவிரவாத எதிர்ப்பு வான் தாக்குதலை மேற்கொண்டனர். இதன் போதே ஃபஸ்லுல்லா கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பெஷவாரில் பாகிஸ்தான் இராணுவப் பள்ளி மீது தலிபான் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலில் 130 சிறுவர்கள் உட்பட 151 பேர் கொல்லப் பட்ட மோசமான தீவிரவாதத் தாக்குதலை ஃபஸ்லுல்லா வழிநடத்தி இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.