உலகம்

சனிக்கிழமை ஆப்கானின் கிழக்கே நங்கர்ஹார் என்ற நகரில் ரமடான் பண்டிகைப் பொழுதில் தலிபான்களால் நடத்தப் பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆப்கான் முழுதும் நோன்பு நோற்கும் நாட்களிலும் பெருநாள் அன்றும் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என தலிபான் போராளிகள் மற்றும் அரசுக்கு இடையே ஒப்பந்தம் கால வரையறை அற்ற ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை அதிகாலையில் 10 இற்கும் மேற்பட்ட ஆயுதம் தரிக்காத தலிபான் தீவிரவாதிகள் தலைநகர் காபூலிலும் வேறு சில முக்கிய நகரங்களிலும் ஒன்று கூடி ரமாடான் நோன்பின் இறுதி நோன்புப் பெருநாளை ஆப்கான் துருப்புக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். இதன் போது அரச துருப்புக்களும் தீவிரவாதிகளும் ஒருவரை இன்னொருவர் அணைத்துக் கொண்டு தமது ஸ்மார்ட் தொலைபேசியில் செல்ஃபீக்களும் எடுத்துக் கொண்டனர்.

ஆனால் இதே நேரம் வேறு சில ஆப்கான் மாகாணங்களில் போராளிகள் ராக்கெட்டு லாஞ்சர்ஸ், கிரைனேட் மற்றும் துப்பாக்கி போன்றவற்றால் ரமடான் ஒப்பந்தத்தையும் மீறி அரச துருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முக்கியமாக நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள காஷி அமினுல்லா கான் என்ற நகரில் கார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ள ரமடான் நோன்பு தொடர்பான 3 நாள் யுத்த நிறுத்தத்தை மேலும் விரிவு படுத்த ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி தலிபான்களிடம் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு ஆப்கானை ஆண்டு வந்த தலிபான்கள் அமெரிக்க சர்வதேச துருப்புக்களால் ஆட்சியில் இருந்து நீக்கப் பட்டு ஜனநாயக ஆட்சி திரும்பிய போதும் அன்று முதல் இன்று வரை அமெரிக்க நேட்டோ படைகளையும் அரசையும் எதிர்த்து தலிபான்கள் தொடர்ச்சியாகப் பல தற்கொலைத் தாக்குதலகளை நடத்தி வருகின்றனர். இதில் பெருமளவிலான துருப்புக்களும் பொது மக்களும் பலியாகி வருகின்றனர்.

ஆப்கானில் ரமடான் பண்டிகைப் பொழுதில் கார்க் குண்டுத் தாக்குல்

சனிக்கிழமை ஆப்கானின் கிழக்கே நங்கர்ஹார் என்ற நகரில் ரமடான் பண்டிகைப் பொழுதில் தலிபான்களால் நடத்தப் பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆப்கான் முழுதும் நோன்பு நோற்கும் நாட்களிலும் பெருநாள் அன்றும் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என தலிபான் போராளிகள் மற்றும் அரசுக்கு இடையே ஒப்பந்தம் கால வரையறை அற்ற ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.