உலகம்
Typography

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் எந்தவொரு அவசர தேவை கருதியும் தன்னை நள்ளிரவிலும் கூட தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கப்பூரில் நடந்து முடிந்த சந்திப்பின் போது இந்த பிரத்தியேக ஹாட்லைன் இலக்கத்தை கிம் இற்கு அளித்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஜூன் 12 ஆம் திகதி உலகமே எதிர்பார்த்த வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையேயான சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் வடகொரியா அணுவாயுதங்களை பூரணமாகப் பகிஷ்கரிப்பது என்றும் பதிலுக்கு இதை நிறைவேற்றியதன் பின்னர் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை மீளப் பெறுவது என்றும் பல ஒப்பந்தங்கள் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்பின் போது கைச்சாத்து ஆகின. இதைத் தொடர்ந்து வாஷிங்டன் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு டிரம்ப் பேட்டியளிக்கும் போது இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்சி மாநாட்டின் பின்னர் சர்வதேச அளவில் வடகொரிய அமெரிக்க உறவு நன்கு வலுப்பட்டுள்ளது. இதனால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் தணிந்துள்ளதுடன் உலக அளவிலும் ஓரளவு அமைதி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்