உலகம்
Typography

தனது இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா தீர்வை வரியை அதிகரித்ததற்குப் பதிலடியாக வியாழக்கிழமை சீனா அமெரிக்கப் பொருட்களுக்கான தீர்வை வரியை அதிகரிப்பதாகவும் ஐரோப்பிய யூனியனைப் பின்பற்றி இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதாகவும் அறிவித்துள்ளன.

இதனால் பூகோள வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் எந்தவொரு அழுத்தமான வரி விதிப்புக்கும் தயாராக இருப்பதாக சீனா வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை மாலை டிரம்ப் $200 பில்லியன் டாலர் பெறுமதியான தீர்வை வரியை அதாவது முன்பை விட 10% வீத அதிக வரியை சீனா மீது விதித்திருந்தார். மேலும் பீஜிங் பதிலடி கொடுக்குமானால் மேலும் $200 பில்லியன் வரியை அதன மீது விதிப்பதாகவும் கூறியிருந்தார். உலகின் வலிமையான பொருளாதார வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் இந்த வர்த்தகப் போர் காரணமாக உலகளாவிய வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே நம்பிக்கை உடைபடவும் பூகோள பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டு வருவதாக இவ்வாரம் உலகின் சக்தி வாய்ந்த மத்திய வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை ஜூலை 6 ஆம் திகதி வாஷிங்டனில் அமெரிக்காவும் இந்தியாவும் வருடாந்த இருதரப்பு 2+2 பேச்சுவார்த்தையை நிகழ்த்தவுள்ளன. இதன்போது அமெரிக்க மாநிலச் செயலாளர் M பொம்பேயோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேத்தீஸ் ஆகியோர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்