உலகம்
Typography

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் வியாழக்கிழமை (ஜூன் 21) ஆம் திகதி ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இதன் மூலம் உலகில் பிரதமர் பதவியில் இருந்த போதே குழந்தை பெற்றுக் கொண்ட 2 ஆவது பிரதமராக இவர் பெயர் பெற்றுள்ளார். நியூசிலாந்து நேரப்படி மாலை 4:45 இற்கு பிறந்த இக்குழந்தை மற்றும் தனது கணவருடனான புகைப் படத்தை இன்ஸ்டர்கிராமில் ஜசிந்தா பதிவிட்டுத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி முலம் பிரதமரான ஆர்டென் நியூசிலாந்தின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெயரையும் கொண்டுள்ளார். ஏற்கனவே பேறுகால விடுப்பில் இருந்த இவர் இன்னமும் 6 மாதம் விடுமுறை எடுத்துத் தனது குழந்தையைக் கவனித்துக் கொள்வார் என்று கூறப்படுகின்றது. இக்காலப் பகுதியில் நியூசிலாந்து துணைப் பிரதமர் அரச பணிகளைக் கவனித்துக் கொள்ளவுள்ளார்.

1990 ஆமாண்டு தான் பதவியில் இருந்த போது குழந்தை பெற்றுக் கொண்ட உலகின் முதல் பிரதமர் பாகிஸ்தானைச் சேர்ந்த பெனாசீர் பூட்டோ ஆவார். பின்னதாக பதவியில் இருந்த போது தேர்தல் பிரச்சார சமயத்தில் பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்