உலகம்
Typography

வெள்ளிக்கிழமை இலண்டனின் சாரிங் கிரொஸ் என்ற ரயில் நிலையத்தில் ஒரு மர்ம நபர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பிரிட்டன் போலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இதனால் குறித்த ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டது. மேலும் இந்த ரயில் நிலையத்தை விரைவில் மீளத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக பிரிட்டன் போக்குவரத்துத் துறை போலிஸ் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து தென் கிழக்கு இங்கிலாந்தில் இருந்து தலைநகருக்கு முக்கிய சேவைகளை வழங்கும் இந்த ரயில் நிலையத்தில் ஆயுதம் தாங்கிய போலிசார்கள் பாரியளவில் குமிந்தது சமூக வலைத் தளங்களில் வெளியான காணொளி மற்றும் புகைப் படங்களில் தெரிய வந்துள்ளது. எனினும் குறித்த ரயில் நிலையம் வெளியிட்ட டுவீட்டில் இந்த மர்ம நபர் கைது செய்யப் பட்ட போது பயணிகள் அதிகளவில் வெளியேற்றப் படவில்லை என்றும் ரயில் சேவைகள் இடையூறின்றி சாதாரணமாக இயங்கக் கூடியதாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது பிரிட்டனில் தீவிரவாதத் தாக்குதல் எப்போதும் இடம்பெறலாம் என்ற 2 ஆவது அதிகபட்ச எச்சரிக்கை நிலை பிரகடனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்