உலகம்

மிக நீண்டகாலமாக ஒழுங்கு செய்யப் படாத நிலையில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்ஸிங்கியில் நடைபெறுவது என ஏற்பாடாகி உள்ளது.

இந்த சந்திப்பின் போது முக்கியமாக தேசிய சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அலசப் படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் புருஸெல்ஸில் நடைபெறவுள்ள நேடோ என்ற மாநாட்டுக்குப் பின்பு புதினுடன் தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை, முன்னதாக புதினுடன் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் சந்தித்துப் பேசிய போது தான் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது சிரியப் போர், உக்ரைனின் அசாதாரணமான சூழ்நிலை என்பவை தொடர்பிலும் பேசப் படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் வியட்நாமில் ஆசிய பசுபிக் சம்மேளனம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் புதன்கிழமை இச்சந்திப்பு உறுதியாகி உள்ளதாக ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசார் யூரி உஷாகோவா இனால் அறிவிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.